Connect with us

கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..

dhanush

Cinema History

கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..

Social Media Bar

இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிக வரவேற்பை பெற துவங்கினார் தனுஷ்.

இடைக்காலங்களில் தனுஷின் திரைப்படங்கள் நிறைய வெற்றியை கொடுத்தன. தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் தன்னை மெருகேற்றி கொண்டவர் தனுஷ்.

dhanush
dhanush

ஏனெனில் அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு அவ்வளவாக நடிக்கவே தெரியவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல எப்படி நன்றாக நடிப்பது என்பதை கற்றுக்கொண்டார் தனுஷ். அதனை தொடர்ந்து அசுரன் மாதிரியான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் தனுஷ்.

இந்த நிலையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்திலும் ஒரு சில திரைப்படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்களை சுராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சுராஜ் முதலில் போக்கிரி ராஜா என்னும் படத்தின் கதையை தனுஷிடம் போய் கூறியுள்ளார்.

ஆனால் அந்த கதை தனுஷிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்த நிலையில் சுராஜிடம் பேசிய தனுஷ். உங்கள் நடிப்பில் படம் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசையாக உள்ளது. எனவே நீங்கள் வேறு கதையை எனக்காக எழுத முடியுமா என கேட்டுள்ளார் தனுஷ்.

padikathavan
padikathavan

பிறகு ஒரு வாரம் கழித்து சுராஜ் ஒரு கதையை எழுதி கொண்டு வந்துள்ளார். கதைப்படி எல்லோரும் பெரிதாக படித்த வீட்டில் படிக்காத ஒருவனாக கதாநாயகன் இருக்கிறான். அவன் படித்த பெண்ணை காதலிக்கிறான் என கூறியுள்ளார் சுராஜ்.

அதை கேட்டதுமே படத்திற்கு ஒப்புக்கொண்டார் தனுஷ். ஏனெனில் தனுஷ் வீட்டில் எல்லோருமே மிகவும் படித்தவர்கள். ஆனால் தனுஷ் படிக்காதவர். அதே போல அவர் திருமணம் செய்த பெண்ணும் படித்தவர். எனவே இது என் கதையை போலவே இருக்கிறது. இதில் நடிக்கிறேன் என கூறியுள்ளார் தனுஷ்.

To Top