ஒரு ஹிட்டு கொடுத்ததுக்கேவா!.. தனுஷும் சிவகார்த்திகேயனும் இயக்குனருக்காக போட்ட போட்டி!..

Dhanush and Sivakarthikeyan: தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருவது தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த விஷயமே. ஏனெனில் முதன் முதலில் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு நடிகர் தனுஷ்தான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் கொஞ்சம் வளர துவங்கிய உடனே தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவர் சம்பளமும் அதிகரித்தது.

தற்சமயம் நடிகர் தனுஷிற்கு இணையான சம்பளத்தை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். இதனாலேயே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக தனது திரைப்படத்தை வெளியிட்டார் தனுஷ். அந்த அளவிற்கு இருவரும் வெளிப்படையாகவே போட்டி போட்டுக்கொள்ள துவங்கியுள்ளனர்.

Good-Night-Movie-Review-Rating
Good-Night-Movie-Review-Rating
Social Media Bar

இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க துவங்கியுள்ளனர். இயக்குனர் விநாயக் சந்திரகேசரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 4 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதற்கு பேசி வைத்துள்ளார். இதற்கு நடுவே அவரை தொடர்பு கொண்ட நடிகர் தனுஷ் தனக்கும் ஒரு கதை எழுதும்படி அந்த இயக்குனரிடம் கூறியுள்ளாராம். இதனையடுத்து அடுத்த படம் யாரை வைத்து இயக்குவது என யோசனையில் இருக்கிறாராம் இயக்குனர்.