Tamil Cinema News
நயன்தாராவுக்கு மட்டும் அதை செய்யவில்லை.. தனுஷ் செய்த வேலை.. அட பாவமே?..
நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை என்பது பலருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக நயன்தாரா திருமண வீடியோ ஒன்று ஆவணப்படமாக வெளியானது.
அதிலிருந்து தனுஷ்க்கும் நயன்தாராவிற்கும் இடையே பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்.
ஆனால் அதற்கான என்.ஒ.சியை தனுஷிடம் அவர் பெறவில்லை. இந்த நிலையில் இதற்காக உரிமை தொகை கேட்டு ஒரு பக்கம் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும் சந்திரமுகி படத்தின் காட்சிகளை அதில் பயன்படுத்தியதற்காக உரிமை தொகை கேட்டு வருகின்றனர்.
இதற்கு நடுவே தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைக்கு பிறகு மீண்டும் ஒரு என்ஓசி விஷயத்தில் தலையிட்டு இருக்கிறார் தனுஷ். வி.ஜே சித்து இயக்குனராகவும் கதாநாயகனாகவும் களமிறங்கும் திரைப்படம் டயங்கரம். இந்த திரைப்படத்தில் வி.ஜே சித்துவின் காட்சிகளின் போது விஐபி திரைப்படத்தில் வரும் இசையை பயன்படுத்தி கொள்வதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டு இருக்கிறார் விஜே சித்து.
அதற்கு எந்தவித கட்டணமும் வாங்காமல் என்ஓசி கொடுத்திருக்கிறார் தனுஷ் இதனை அடுத்து நயன்தாரா மீது இருக்கும் தனிப்பட்ட வன்மத்தில் தான் நயன்தாராவை இப்படி பழிவாங்கி வருகிறாரா தனுஷ் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
