Connect with us

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Cinema History

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Social Media Bar

Dhanush and Ilayaraja: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொன்னால் ஒருவர் சூப்பர் ஸ்டார், மற்றொருவர் கமல்ஹாசன். 1970களிலிருந்து தங்களுடைய நடிப்பு ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் பதித்துவருகிறார்கள் இவர்கள் இருவரும்.

இவர்களுக்கு இணை மற்றொரு நடிகர் இருக்க முடியுமா என்றால் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை ஆட்சி செய்யும் இரு தலைகள்.

இவர்களே நடிக்க முடியாத ஒரு இசை ஜாம்பவானின் வாழ்க்கை படத்தில் இப்போது வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா.

நடிப்பில் ராஜாக்களாக இருந்துகொண்டிருக்கும் ரஜின், மற்றும் கமல் மேலும் பல நடிகர்களின் படங்களுக்கு உயிர் கொடுத்த இசை மேதை இசைஞானி இளையராஜா. இது எப்படி சாத்தியம் என்று உங்களைப்போலவே எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ஆனால் இது உண்மையாக இருந்தால் தனுஷின் வாழ்வில் தமிழ் திரை உலகம் மட்டுமல்ல இந்திய திரையுலகமே திரும்பிப்பார்க்கும் ஒரு படமாக இந்தப்படம் இருக்கும்.

இசைஞானியின் இசை எத்தனை தலைமுறை கடந்தாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள். எத்தனை இசை கலைஞர்கள், இசை பொருட்கள் வந்தாலும் இசைஞானிக்கு இணை இசை ஞானி மட்டும் தான் என்று எத்தனையோ சரித்திர வெற்றியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு உண்மை சரித்திர நாயகனின் கதையில் நடிப்பது அவ்வளவு எளிதானதா என்ன?. இதில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவென்று பார்த்தால் ரஜினி மற்றும் கமலுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்திருக்கிறது மேலும் தனுஷ் இசைஞானியின் ஒரு தீவிர ரசிகன் என்பதால் இந்த வாய்ப்பை நிச்சயம் 100% உழைப்பை கொடுத்து நிகழ்த்திக் காட்டுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

To Top