News
போயஸ் கார்டன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மர்மம்… தனுஷ் காசில் கட்டியது கிடையாது!.. வெளியிட்ட பிரபலம்!.
தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்த வளர்ச்சி பெறுவதற்கு நடிகர் தனுஷ் மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் அதிகமாக கேலிக்கு உள்ளான நடிகராக இருந்தவர் நடிகர் தனுஷ்.
தனுஷ் வீடு:
சினிமாவில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் அவருக்கு அவரை விடவும் பெரும் நடிகராக இருந்தார் நடிகர் சிம்பு. இப்படி எல்லாம் இருந்த பல நடிகர்களையும் தாண்டி இப்பொழுது தனக்கான இடத்தை தனுஷ் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவரது ஐம்பதாவது திரைப்படம் ஆன ராயன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கியிருந்தார். நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது ராயன் திரைப்படம்.

இந்த நிலையில் தொடர்ந்து தனுஷ் இதுக்குறித்து குறித்து நிறைய சர்ச்சைகளில் அவரது வீடு குறித்த சர்ச்சைகளும் ஒன்று. போயஸ் கார்டனில் தனுஷ் அதிக செலவில் வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டுக்கு கூட சமீபத்தில்தான் கிரகப்பிரவேசம் நடத்தி குடி போனார்.
தனிஷ் ஆசை:
அந்த வீடு குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து தனுஷ் பதிலளித்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு போயஸ் கார்டனில் வீடு கட்டுவது என்பது வெகுநாளைய ஆசை, அதை தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர்கள் பதில் அளிக்கும் போது அந்த பதில்கள் வேறு மாதிரி இருக்கின்றன. அவர்கள் கூறும் பொழுது தனுஷ் இந்த வீட்டை கட்டுவதற்கு நிறைய செலவு ஆனதால் அதற்கான காசை தயாரிப்பாளர்களிடம் வாங்கினார்.
தயாரிப்பாளர்களிடம் படத்திற்கு அட்வான்ஸ் தொகையாக கேட்டு வாங்கிதான் அந்த வீட்டை கட்டினார் தனுஷ். ஆனால் அட்வான்ஸ் தொகை வாங்கிய யாருக்கும் தனுஷ் படம் நடித்து கொடுக்கவில்லை இதனால் அவர்கள் எல்லாம் கவலையில் இருக்கின்றனர். இதனால்தான் தற்சமயம் தயாரிப்பாளர் சங்கமும் தனுஷ் புது படங்களில் கமிட்டாக கூடாது ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.
