Tamil Cinema News
என்னை விட்டுடுங்க.. வாய்ப்பு கொடுத்த தெலுங்கு சினிமாவை உதறிய தனுஷ்.. இதுதான் காரணம்..!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் சேகர் கமுலா.
இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கி வருகிறார். இவரது ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில் தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் குபேரா இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வெளியானது தமிழில் இந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நல்ல வெற்றியை கொடுத்தது குபேரா திரைப்படம்.
ஒரு பிச்சைக்காரனுக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்லும் தெலுங்கு சினிமாவில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து நடிகர் தனுஷ்க்கு தெலுங்கில் வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன.
நிறைய இயக்குனர்கள் தனுஷிடம் கதை சொல்ல தயாராக இருக்கின்றனர் ஆனால் அவர்களிடம் தனுஷ் இன்னும் இரண்டு வருடத்திற்கு என்னிடம் கால் சீட்டு இல்லை என்று கையை விரித்து விட்டாராம். ஏனெனில் ஏற்கனவே தனுஷ் போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டுமன்றி இயக்குனர் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், தமிழரசன் பச்சைமுத்து, ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குனர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க இருக்கும் காரணத்தினால் இரண்டு வருடங்களுக்கு வேறு எந்த திரைப்படங்களிலும் கமிட்டாக முடியாது என்று முடிவு எடுத்து இருக்கிறார்
