என் அனுமதி இல்லாமல் எப்படி இதை செய்யலாம்.. கடுப்பான தனுஷ்..!
தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர். ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.
அப்படியாக அவர் நடித்து ஹிந்தியில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் ராஞ்சனா தமிழில் இந்த படம் அம்பிகாபதி என்கிற பெயரில் வெளியானது. இந்த படம் தான் பாலிவுட்டில் தனுஷுக்கு முதல் படம் என்று கூறலாம்.
இந்த படம் சோக கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் கூட இதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. படத்தில் தனுஷ் இறந்து விடுவதாக படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
அப்படி மறுவெளியீடு செய்யும் பொழுது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஏ.ஐ முறை மூலம் மாற்றி அமைத்து இருக்கின்றனர் அதாவது தனுஷ் சாகவே இல்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதாக அந்த காட்சி அமைந்திருந்தது.
இந்த நிலையில் இதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் அவருடைய விருப்பமே இல்லாமல் இந்த விஷயம் நடந்ததாக அவர் கூறியிருக்கிறார் மேலும் படத்தின் இயக்குனரான ஆனந்த் எல்ராயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமே தெரியாமல் தயாரிப்பாளர் இதை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.