பைசன் திரைப்படம் வெளியானதில் இருந்து இப்பொழுது துருவ் விக்ரம் ஒரு ட்ரெண்டான நடிகராக மாறி இருக்கிறார். தொடர்ந்து அவரை குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களிலும் அதிகமாக இருந்து வருகிறது.
முக்கியமாக பைசன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய தனிப்பட்ட நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவக்கி இருக்கிறது. சிறுவயதில் அவர் செய்த செயல் ஒன்றை பேட்டியில் கூறியிருந்தார் துருவ் விக்ரம்.
ஐ படம் வெளியாக இருந்த சமயத்தில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஏ ஆர் ரகுமான் அந்த படத்திற்கான ஒரு பாடலை இசையமைத்து கொடுத்திருந்தார். அதை எனது தந்தை பென்டிரைவில் வைத்திருந்தார்.
நான் பள்ளிக்கு செல்லும் பொழுது அந்தப் பென்டிரைவை திருடி கொண்டு சென்று விட்டேன். அங்கு மாணவர்களிடம் அந்த பாடலை போட்டு காட்டினேன்.
பிறகு மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்பொழுது எனது தந்தை என்னை செமையாக அடித்தார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் துருவ் விக்ரம்.
அந்த சமயத்தில் ஐ படத்தில் எந்த ஒரு பாடலும் வெளியாகாமல் இருந்துள்ளது. அதை மாணவர்களிடம் சென்று லீக் செய்து இருக்கிறார் துருவ் விக்ரம். அதற்காக தனது தந்தை தன்னை அடித்ததாக அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.










