Connect with us

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

vikram dhruva natchathiram

News

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

Social Media Bar

Vikram Dhuruva natchathiram : சியான் விக்ரம் நடித்து, கௌதம் வாசு தேவமேனன் இயக்கத்தில் இன்று வெளிவர இருந்த “துருவ நட்சத்திரம்” திரைப்படம் இன்று திரைக்கு வராது என்று இயக்குனர் அறிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிக்கலால் படபிடிப்பு அவ்வபோது தடைபட்டுவந்தது. இந்த பொருளாதார நிலையை சரிசெய்யத்தான் நான் படங்களில் நடிக்கவும் செய்தேன் என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த பெரும்பாலான படங்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி இன்று படம் வெற்றிகரமாக வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும் பணப்பிரச்சனை காரணமாகத்தான் இன்று படவெளியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் படம் இன்னும் ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் தனது “X” தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த படவெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை விக்ரம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அடுத்து படவெளியீடு தேதி அறிவித்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது.

To Top