இந்த படம் போரடிக்கும் சார் ! –  ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ

உலக புகழ்ப்பெற்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே எப்போதும் உலக அளவில் வரவேற்பையும் ஹிட்டையும் கொடுக்க கூடியவை.

ஜேம்ஸ் கேமரூனுக்கு முதல் முதலில் பெரும் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் டைட்டானிக். இந்த படம் 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல நடிகரான லியானார்டோ டிகாப்ரியா நடித்து வெளியானது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என 11 விருதுகளை இந்த படம் வென்றது. அப்போதைய காலங்களில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக டைட்டானிக் இருந்தது.

டைட்டானிக் வெளியாகி 25 வருடம் முடிந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக திரும்பவும் அந்த படத்தை டிஜிட்டல் வெர்ஸனாக மாற்றி வெளியிட இருக்கிறார்கள். 3டி தொழில்நுட்பத்தையும் சேர்த்து படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் டைட்டானிக் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதாவது முதன் முதலில் டைட்டானிக் படத்தின் கதையை நடிகர் டிகாப்ரியோவிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது அதை கேட்ட டிகாப்ரியோ, என்ன சார் இந்த படக்கதை ரொம்ப சுமாராக இருக்கே, போரடிக்கும் போலயே என கூறியுள்ளார்.

ஆனால் படம் வெளியான பிறகு டிகாப்ரியாவிற்குமே இது முக்கியமான படமாக அமைந்தது.

Refresh