Cinema History
ரசிகர் செய்த நகைச்சுவை? – ரயில்வே ஸ்டேஷனில் டெல்லி கணேஷ்க்கு நடந்த சம்பவம்!
தமிழில் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட சில நடிகர்கள் இறுதிவரை பெரும் அங்கீகாரத்தை பெறுவதே இல்லை. நாசர், எம்.எஸ் பாஸ்கர் மாதிரியான அந்த வரிசையில் முக்கியமான நடிகர் டெல்லி கணேஷ்.

கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் வெகுவாக நடிக்கும் நடிகர்களைதான் பொறுக்கி போடுவார். அப்படி கமல் படங்கள் பலவற்றில் நடித்த நடிகர்களில் டெல்லி கணேஷும் ஒருவர். ஆனால் அவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் பெரிதாக கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
அதை நிரூபிக்கும் விதமாக அவரது வாழ்வில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லி கணேஷ் ஒருமுறை ரயில் நிலையத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை கண்ட ஒருவர் “சார் நான் உங்களோட மிகப்பெரும் ரசிகன் சார். என் மனைவியும் கூட உங்களின் மிகப்பெரும் ரசிகை சார்” என கூறியுள்ளார்.
பிறகு அந்த ரசிகர் தனது மனைவிக்கு போன் செய்து “இப்போ நான் யாருக்கிட்ட நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா? உனக்கு பிடிக்குமே விசு சார் அவருக்கிட்ட நின்னுட்டு இருக்கேன். பேசுறியா? என மனைவியிடம் கூறிவிட்டு தன் மனைவியிடம் பேசும்படி டெல்லி கணேஷிடம் போனை கொடுத்துவிட்டார்.
அவரும் “நான் விசுதான் பேசுறேன்” என பேசியுள்ளார். இந்த நகைச்சுவை நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
