பெரும் அன்னோஸ்மெண்டால இருக்கு? – அஜித், தனுஷ் எல்லோரது படத்தையும் வாங்கிய நெட்ப்ளிக்ஸ்!

இந்த வருடம் துவங்கியதும் பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என வருடத்தை துவங்கியிருப்போம்.

Made using TurboCollage from www.TurboCollage.com

அதே போல இந்த வருடம் இந்தியாவில் அதிக சப்ஸ்க்ரிப்சனை பெற வேண்டுமெ என டார்கெட் வைத்து இறங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். பொங்கலை முன்னிட்டு வரிசையாக நெட்ப்ளிக்ஸ் பண்டிகை என்னும் ஹாஸ் டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது நெட்ப்ளிக்ஸ்.

இந்த வருட துவக்கத்திலேயே பல தென்னிந்திய திரைப்படங்களின் ஓ.டி.டி ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் வாங்கிவிட்டது. தற்சமயம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ரயில் விடுவது போல வாங்கிய படங்களின் லிஸ்ட்டை விட்டு வருகிறது நெட்ப்ளிக்ஸ்.

அதில் தமிழ் திரைப்படங்கள் என பார்க்கும்போது

 • அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் ஏ.கே 62
 • தனுஷ் நடிக்கும் வாத்தி
 • விக்ரம் நடிக்கும் தங்கலான்
 • சமுத்திரக்கனி நடிக்கும் தலைக்கூதல்
 • கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா
 • பாரதி ராஜா அருள்நிதி நடிக்கும் ப்ரொடக்‌ஷன் 24 (பெயர் வைக்கவில்லை)
 • ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ப்ரொடக்‌ஷன் நம்பர் 20
 • விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்கு ப்ரொடக்‌ஷன் நம்பர் 18
 • உதயநிதி நடிக்கும் மாமன்னன்
 • லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிக்கு ஜிகர் தண்டா டபுள் எக்ஸ்
 • சந்திரமுகி 2
 • கார்த்தி நடிக்கும் ஜப்பான்
 • ஜெயம் ரவி நடிக்கும் இறைவன்
 • விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யான்

இத்தனை தமிழ் படங்களையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே வாங்கிவிட்டது. இதில் சில படங்களுக்கு இன்னும் படப்பிடிப்பே துவங்கவில்லை. இந்த படங்கள் யாவும் திரையரங்கில் வெளியான பின்னர் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும்.

இன்னும் அப்டேட் வரவிருக்கிறது என்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Refresh