Connect with us

அர்ச்சனா இவ்வளவு ஃபேமஸா இருக்க காரணம் என்ன!.. சீக்ரெட்டை கண்டறிந்த தினேஷ்!..

archana dinesh

Bigg Boss Tamil

அர்ச்சனா இவ்வளவு ஃபேமஸா இருக்க காரணம் என்ன!.. சீக்ரெட்டை கண்டறிந்த தினேஷ்!..

Social Media Bar

Biggboss tamil archana: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக ஐந்து போட்டியாளர்கள் வந்தது முதலே போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது. முக்கியமாக அதில் அர்ச்சனாவும் தினேஷும் சுறு சுறுப்பாக விளையாடி கொண்டுள்ளனர்.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே அவருக்கான வரவேற்பு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் மாயாவின் புல்லி கேங் அர்ச்சனாவை வைத்து செய்தது மக்களுக்கு அர்ச்சனா மீது ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தியது.

அதையடுத்து இந்த பிரச்சனை நடந்து இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் கூட அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. அதே போல தினேஷிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக பட்டாளம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் எப்படி அர்ச்சனாவிற்கு மட்டும் இவ்வளவு ரசிக வட்டாரம் உள்ளது என்பது குறித்து தினேஷ் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது அனைத்து போட்டியாளர்களும் வந்த முதல் வாரமே அர்ச்சனாவிற்கும் வர வாய்ப்பு இருந்தது.

ஆனால் அவர் வைல்ட் கார்டு மூலமாக வருகிறேன் என்று அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். இதன் மூலமாக ஒரு மாதமாக வெளியில் இருந்து விளையாட்டையும் அதில் மக்கள் மனநிலையையும் புரிந்துக்கொண்டார். மேலும் அவரை விளம்பரப்படுத்த வெளியில் ஒரு குழுவை அமர்த்தி உள்ளார். என்று கூறியுள்ளார் தினேஷ்.

ஆனால் உண்மையில் அர்ச்சனா குறித்து அப்படி எந்த குழுவும் விளம்பரப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே தினேஷ் கூறியதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதும் தெரியவில்லை.

To Top