Connect with us

அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..

director ameer

News

அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..

Social Media Bar

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படமே அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார்.

பொதுவாகவே இயக்குனர் பாலா கொஞ்சம் கோபமான ஆள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் பாலாவுக்கும், அமீருக்கும் இடையே நடந்த பிரச்சனையால் அமீர் பாலாவை விட்டு தனித்து வந்து திரைப்படம் இயக்க துவங்கினார்.

வட சென்னையில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அமீருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின. இந்த நிலையில் அதே ராஜன் கதாபாத்திரம் ஒருவேளை ரவுடி ஆகாமல் அவனது வாழ்க்கை மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்கிற ரீதியில் தற்சமயம் மாய வலை என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன்.

இந்த திரைப்படம் குறித்து பேசும்போது 2கே கிட்ஸ்கள் குறித்து அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது தற்சமயம் உள்ள 2கே கிட்ஸ்களுக்கு சினிமா குறித்த ரசனை முற்றிலும் மாறியுள்ளது. அதை பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர் ரசனை என்பதெல்லாம் தலைமுறை பொறுத்து மாறாது. புது சினிமாவிற்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். 2கே கிட்ஸ்களின் ரசனைக்காக படம் எடுக்கிறீர்கள் என்றால் உங்களையே நீங்கள் ஏமாத்திங்கிறீங்க என்றுதான் அர்த்தம். சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலேயே பாலச்சந்தர் புது வகையான படங்களை இயக்கியப்போது அதற்கு வரவேற்பு இருந்தது.

எனவே எப்போதுமே தமிழ் சினிமாவில் புது வகையான படங்களுக்கு வரவேற்பு இருக்கும். எனவே உங்கள் கதையின் மேல் உண்மையாக இருந்து படத்தை எடுக்க வேண்டுமே தவிர தலைமுறைகளுக்கு ஏற்ற மாதிரி எடுக்க முயற்சிக்க கூடாது என விளக்கியிருந்தார் அமீர்

To Top