Connect with us

அப்பவே நான் ரெடிதான் வரவா ரேஞ்சுக்கு ஒரு காட்சி!.. தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் டொக்கு வாங்கிய இயக்குனர்!..

ap nagarajan kandhan karunai

Cinema History

அப்பவே நான் ரெடிதான் வரவா ரேஞ்சுக்கு ஒரு காட்சி!.. தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் டொக்கு வாங்கிய இயக்குனர்!..

Social Media Bar

Kandhan Karunai Movie : பழைய காலம் முதலே தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் செலவு செய்து ஒரு பாடலை எடுப்பது என்பது பிரபலமாக இருந்த விஷயமாகும். அப்போது தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலக்கட்டம் என்பதால் ஏரோபிளேன் பெரிய கடிகாரம் போன்ற செட்டுகளை போட்டு அதில் நடிகர் நடிகைகளை ஆட வைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்துவர்.

அதற்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் மற்றொரு காட்சி என்றால் அது சண்டை காட்சி. சண்டை காட்சிகள் எப்போதுமே செலவு அதிகமாக தான் இருக்கும் அப்படி கந்தன் கருணை திரைப்படத்தில் இயக்குனர் ஏபி நாகராஜன் ஒரு காட்சியை படமாக்க நினைத்தார்.

அந்த காட்சியில் கிட்டத்தட்ட 1000 பேர் அந்த படப்பிடிப்பு தளத்தில் சண்டை போட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது அந்த படப்பிடிப்பு தளத்தை வந்து பார்வையிட்ட தயாரிப்பாளர் இந்த தளத்தில் 500 பேருக்கு மேல் நின்று சண்டையிட முடியாது.

அதற்கு மேல் ஆட்கள் நிற்பதற்கு இடம் பத்தாது என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். இதனை கேட்ட ஏ.பி நாகராஜன் நீங்கள் வேண்டுமானால் இந்த படப்பிடிப்பை நடத்துகிறீர்களா? என சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பிறகு அவரது அலுவலகத்திற்கு சென்ற தயாரிப்பாளர் நீங்கள் கேட்டது போல ஆயிரம் பேரை தயார் செய்து தருகிறேன் நீங்கள் படபிடிப்பை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். மறுநாள் படப்பிடிப்பு துவங்கிய பொழுது அந்த தயாரிப்பாளர் சொன்னது போலவே 500 பேருக்கு மேல் ஆட்களை அந்த படபிடிப்பு தளத்தில் நிறுத்த முடியவில்லை. இதனால் தன் தவறை உணர்ந்த இயக்குனர் ஏ.பி நாகராஜன் பிறகு தயாரிப்பாளரிடம் வந்து இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

To Top