குடும்பமும் விட்டுட்டாங்க.. சாகு.ற நிலைக்கு போயிட்டு வந்தேன்.. பழைய வாழ்க்கையை பகிர்ந்த பாலா..!

தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாதான்.

இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளங்களில் மிக மோசமாக நடந்து கொள்ளக் கூடியவர். துணை நடிகைகளை மோசமாக நடத்துபவர் என்றெல்லாம் அவரை குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் அதே சமயம் சின்ன சின்ன நடிகர்களை வைத்து கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வைக்கும் திறனை பாலா கொண்டிருக்கிறார்.

ஆர்யா விஷால் மாதிரியான நடிகர்கள் கூட அவன் இவன் மாதிரியான திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பை மற்ற திரைப்படத்தில் வெளிப்படுத்துவது கிடையாது.

director bala
director-bala1
Social Media Bar

அதற்கு காரணம் இயக்குனர் பாலாதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்த அனுபவம் குறித்து பாலா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு வயது வரை போதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு சென்றேன்.

ஒரு கட்டத்தில் அதிக போதைக்கு உள்ளாகி ஒரு வாரம் மருத்துவமனையிலேயே இருந்தேன். அப்பொழுது முடிவு செய்தேன் இனி போதைப் பொருட்கள் மீது கை வைக்க கூடாது என்று, ஆனால் எனக்கு படிப்பும் இல்லை எந்த ஒரு பெரிய திறமையும் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சரி சினிமாவிற்கு வருவோம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் சினிமா என்னை வாழ வைத்தது ஒரு வேளை சினிமாவிற்கு வரவில்லை என்றால் நான் இறந்திருப்பேன். ஒன்று கொலை செய்யப்பட்டிருப்பேன் அல்லது நானாகவே இறந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார் பாலா.