Tamil Cinema News
திருமணத்தை விட அந்த உறவு பிடிச்சிருக்கு.. ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன்.
நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பதாலேயே சுருதிஹாசன் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுருதிஹாசனின் நடிப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமாறு அமையவில்லை.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பதும் குறைய தொடங்கியது. என்னதான் உலக நாயகனின் மகளாக இருந்தாலும் கூட நன்றாக நடித்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை தமிழ் சினிமாவில் உண்டு.
அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் சில காலங்கள் நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். பிறகு அவருக்கு அங்கேயும் வாய்ப்புகள் என்பது குறைந்தது தற்சமயம் லோகேஷ் கனகராஜ் உடன் நட்பில் இருந்து வரும் சுருதிஹாசன் அவர் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கை குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருப்பார். அதில் அவர் கூறும் பொழுது திருமண வாழ்க்கை மீது ஈடுபாடு வரவில்லை. திருமண வாழ்க்கையை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தான் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதனால் இப்போதும் திருமணமே செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
