Connect with us

அவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல!.. படப்பிடிப்பிலும் மிஸ்கின் செய்த வேலை!.. அதிர்ச்சியான பாலா!

mysskin bala

News

அவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல!.. படப்பிடிப்பிலும் மிஸ்கின் செய்த வேலை!.. அதிர்ச்சியான பாலா!

Social Media Bar

Director Bala: தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பார்க்கும் ரசிகர்களே பயப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாதான். பாலா இயக்கும் திரைப்படங்களில் நடிகர்கள் படும் பாடு பலரும் அறிந்ததே. அதே போல ஒரு காட்சி நன்றாக வரும் வரை அந்த காட்சியை மறுபடி மறுபடி எடுத்துக்கொண்டே இருப்பார் பாலா.

அப்படி சினிமாவில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சில இயக்குனர்கள் உண்டு. ராம், மிஸ்கின் என குறிப்பிட்ட சிலரை இதில் கூற முடியும்.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஸ்கினும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுக்குறித்து பாலா கூறும்போது மிஸ்கின் என்னை விட சிறப்பான இயக்குனர்.

அவன் நடிக்கும் காட்சிகளை அவன்தான் இயக்கினான். அதே போல ஒரு காட்சியில் அவன் குணிந்து இருப்பது போன்ற காட்சி. அந்த காட்சியில் குனிந்துக்கொண்டே மற்ற நடிகர்கள் ஒழுங்காக நடிக்கிறார்களா என பார்த்துக்கொண்டே இருந்தான்.

அப்போதுதான் தெரிந்தது. அவன் எவ்வளவு நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் பார்க்கிறான் என்பது, அவனுக்கு முன்னாடி எல்லாம் நான் ஒண்ணுமே இல்லை. நான் அவன் அளவிற்கு அனைத்து விஷயங்களையும் பார்ப்பதில்லை என கூறியுள்ளார் பாலா.

To Top