Latest News
இனி பத்து பைசா செலவில்லாமல் கேம் விளையாடலாம்!.. கணினி கேம்களை இலவசமாக வழங்கும் தளம்!.
புத்தக விரும்பிகளுக்கு அமேசான் கிண்டில் போலவே கேமர் மக்களுக்கு உதவும் வகையில் வேலை செய்கிறது எபிக் கேம்ஸ்.. அமேசான் கிண்டிலில் சில நாட்களில் ஆஃபரில் விலை உயர்ந்த புத்தகங்களை கூட இலவசமாக விற்பதை பார்க்க முடியும்.
அதே போல எபிக் கேம்ஸ் தினசரி ஒரு கேமை இலவசமாக வழங்குகிறது. கேமர் கம்யூனிட்டியை பொறுத்தவரை அதிகப்பட்சம் க்ராக் செய்யப்பட்ட பைரேட் வெர்ஷன் கேம்களைதான் விளையாடி கொண்டிருப்பார்கள். அது கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் அது சட்டப்படி குற்றமாகும்.
ஆனால் ஆன்லைனில் காசு கொடுத்து வாங்கும் கேம்களில்தான் மல்டிப்ளேயர் ஆப்ஷன் இருக்கும். ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாட முடியும். எபிக் கேம்ஸ் தினமும் மதிப்பு வாய்ந்த கேம்களை இலவசமாக கொடுக்கிறது.
இன்று கூட கோஸ்ட்ரன்னர் என்னும் 2000 ரூபாய் மதிப்புள்ள கேமை இலவசமாக வழங்கியுள்ளது. இது கேமர் கம்யூனிட்டியை உலகமெங்கும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். அமெரிக்கா மாதிரியான பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு காசு கொடுத்து ஒரு கேமை வாங்குவதில் பிரச்சனை இருக்காது.
ஆனால் வளர்ச்சி இல்லாத இந்தியா மாதிரியான நாட்டு மக்களுக்கு இன்னமும் ப்ளேஸ்டேஷன் என்பதே கனவு மாதிரிதான். இந்த நிலையில் எபிக் கேம்ஸ் இப்படி தினசரி ஒரு கேமை இலவசமாக வழங்குவது பாராட்டுக்குரிய விஷயமாகும்.