ஏனோ தானோன்னு நடிக்கிற ஆட்கள் எனக்கு தேவையில்லை!.. விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா?.. இயக்குனர் பாலா

Director Bala: தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமாக சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக பாலா அறியப்படுகிறார். சேது திரைப்படத்தின் வெற்றியானது இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் இயக்குனர் பாலா. அதிகப்பட்சம் பாலா இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதே சமயம் பாலா வழக்கமாக அட்லீ, லோகேஷ் கனகராஜ் மாதிரி சண்டை படங்களை இயக்குவதில்லை.

Social Media Bar

அவரது திரைப்படங்களில் பல விஷயங்களை பேசியிருப்பார் பாலா. நான் கடவுள், பரதேசி மாதிரியான பல படங்களில் அதை பார்க்க முடியும். இதனாலேயே வளர்ந்து வரும் நடிகர்கள் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என நினைப்பதுண்டு.

உண்மையை கூறிய பாலா:

ஆனால் தற்சமயம் பாலா இயக்கிய திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து வணங்கான் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பாலா.

இந்த நிலையில் பாலா முன்பு பேசிய பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் அவர் கூறும்போது படத்திற்காக கடுமையாக உழைக்கும் நடிகர்களுடன் தான் நான் சேர்ந்து பணிப்புரிய விரும்புகிறேன். சும்மா ஏனோ தானோவென வந்துவிட்டு ஆட்டமும் பாட்டமும் செஞ்சுட்டு போற நடிகர்களுடன் பணிப்புரிய எனக்கு விருப்பமில்லை.

அதன் மூலம் எத்தனை கோடி வருமானம் வந்தாலும் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறியுள்ளார் பாலா. இதனால்தான் இவர் அஜித் விஜய் மாதிரியான முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லையா என்கிற கேள்வி இதன் மூலமாக எழுந்துள்ளது.