Cinema History
25 நாள் கமல் பேசியும் அந்த படத்தை மறுத்துட்டேன்!.. எனக்கு பிடிச்சாதான் பண்ண முடியும்!. சிறப்பான படத்தை மிஸ் செய்த கௌதம் மேனன்!.
தமிழில் காதல் படங்கள் மற்றும் க்ரைம் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். எவ்வளவிற்கு காதலை மக்கள் மனதில் பட்டாம்பூச்சி பறப்பது போல அழகாக காட்டுகிறாரோ அதே போல ரத்தம் சொட்ட சொட்ட க்ரைம் திரைப்படங்களையும் அவரால் செய்ய முடியும்.
இந்த நிலையில் பாக்கியராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கௌதம் மேனன் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். பாக்கியராஜிற்கு முன்பு வரை திரைப்படத்தின் கதை, வசனம் போன்றவற்றை எழுதுவதற்கு தனி ஆட்கள் இருந்தனர்.
பல எழுத்தாளர்கள் இந்த மாதிரியான கதை எழுதுவதில் ஈடுப்பட்டு வந்தனர். ஆனால் பாக்கியராஜிற்கு பிறகு அப்படியான ஆட்கள் குறைய துவங்கினர். ஏனெனில் அவரே அவரது திரைப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை எழுதிவிடுவார். இந்த நிலையில் திரைக்கதை எழுதுபவர்களே இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.
இதுக்குறித்து கௌதம் மேனனிடம் கேட்கும்போது நான் இந்த இரண்டு வகைகளிலும் திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் என்னுடைய கதை கிடையாது. அது வேறு ஒரு இயக்குனரின் கதை.
அவரிடம் அதை வாங்கி நான் திரைக்கதை எழுதினேன். அதே போல வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதை ஜெயமோகன் எழுதிய நாவலின் கதையாகும். அதை கொண்டு படத்திற்கான கதையை விரிவாக்கினேன். அதே சமயம் வாரணம் ஆயிரம், காக்க காக்க போன்ற படங்கள் எல்லாம் என்னுடைய கதை.
என்னை பொறுத்தவரை ஒரு கதை இயக்குனருடையதாகதான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த கதையை உள்வாங்கி படமாக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் போதும். உதாரணத்திற்கு கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை நாந்தான் இயக்குவதாக இருந்தது.
அதற்காக 25 நாட்கள் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் எனக்கு அந்த படம் சரிப்பட்டு வரும் என தோன்றவில்லை. என்னால் 10 கதாபாத்திரங்களை நிர்ணயிக்க முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே நானே அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என கூறுகிறார் கௌதம் மேனன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்