புதுசா இயக்குனர்னு வந்தா இதான் பிரச்சனை!.. சிக்கலில் சிக்கிய மகனுக்கு உதவ விஜய் செய்த காரியம்!.. அதான் படம் லேட்டா?

Jason Sanjay: பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது என்பது திரைத்துறையில் பல காலங்களாகவே நடந்து வரும் விஷயமாகும். அந்த வகையில் விஜய்க்கு பிறகு தற்சமயம் அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் அவர் சினிமாவிற்கு நடிக்கதான் வருவார் என்று எதிர்பார்த்தார் விஜய். ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு திரைப்படங்களில் நடிப்பதை விடவும் அதை இயக்குவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு சென்று இயக்குனராவதற்காக படித்து வந்தார்.

jason-sanjay
jason-sanjay
Social Media Bar

இந்த நிலையில் திரும்ப தமிழ்நாடு வந்த ஜேசன் சஞ்சய்க்கு விஜய் லைகா நிறுவனம் மூலமாக திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புகளை பெற்று கொடுத்தார். மூன்று மாதத்திற்கு முன்பே இதுக்குறித்த அறிவிப்புகள் வந்த நிலையில் இன்னும் அந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

உதவிக்கு வந்த இயக்குனர்:

இதுக்குறித்து திரைத்துறையில் பலவாறு பேச்சுக்கள் உள்ளன. அதாவது ஜேசன் சஞ்சைக்கு தமிழில் எழுத படிக்க தெரியாது என கூறப்படுகிறது. இதனால் திரைக்கதை எழுதுவதிலேயே சிரமம் ஏற்பட்டதால் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை இதற்காக பணியில் அமர்த்தியுள்ளனர்.

மேலும் இதற்கு முன்பு எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிப்புரிந்ததே இல்லை என்பதால் இயக்குனராக பல விஷயங்களை இன்னமும் கற்றுக்கொள்ளாமலே இருக்கிறார் ஜேசன் சஞ்சய். இந்த நிலையில் அவருக்கு உதவுவதற்காக விஜய் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

முள்ளும் மலரும் மாதிரியான சிறப்பான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் மகன் இயக்குனர் ஜான் மகேந்திரனை ஜேசன் சஞ்சய்க்கு உதவும்படி கேட்டுள்ளார் விஜய். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து சச்சின் என்கிற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து திரைக்கதை எழுதுவதில் அவர் ஜேசன் சஞ்சய்க்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.