கார்த்திக் சுப்புராஜுடன் அடுத்த படம்.. அடுத்து வந்த ரஜினி பட அப்டேட்.!
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் ஆன பின்பும் கூட தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது அப்படியேதான் இருக்கிறது.
வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி, இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்கி சென்று கொண்டுள்ளது. இதற்கு அடுத்து ரஜினிகாந்த் யார் தயாரிப்பில் படம் நடிக்க போகிறார் என கேள்விகள் இருந்து வந்தது.
இந்த நிலையில் அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.