அஜித் படக்கதையை வச்சி எனக்கு படம் பண்ணுங்க.. ரஜினியே வாய்ப்பு கொடுத்தும் கெடுத்துக்கொண்ட இயக்குனர்!.
தமிழ் சினிமாவை பொருத்தவரை வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டால் திரும்ப அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது சொல்ல முடியாத விஷயமாகும்.
அப்படி நல்ல நல்ல வாய்ப்புகள் நிறைய கிடைத்தும் அவற்றை தவற விட்டு அதனால் தமிழில் வரவேற்பை இழந்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டகோழி , பையா மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பொழுது லிங்குசாமிக்கு அதிகமான வரவேற்பு இருந்தது.

நடிகர் கமல்ஹாசன் கூட ரன் திரைப்படம் வெளியான பிறகு லிங்குசாமியுடன் நடிக்க தயாராக இருந்தாராம். ஆனால் லிங்குசாமி அந்த படத்தை இறுதி வரை எடுக்கவில்லை. அதேபோல அஜித் நடித்த ஜி திரைப்படத்தின் கதையை லிங்குசாமி எழுதி வைத்திருந்த பொழுது ஒருமுறை ரஜினியை சந்தித்தாராம்.
அப்பொழுது இந்த படத்தின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார் லிங்குசாமி. அதனை கேட்ட ரஜினிகாந்த் இந்த கதை நன்றாக இருக்கிறது படப்பிடிப்பு துவங்கியாச்சா? என்று கேட்டிருக்கிறார். ரஜினி இல்லையே இன்னும் கதாநாயகர்களையே ஓ.கே செய்யவில்லை என்று கூறி இருக்கிறார் லிங்குசாமி.

அப்படி என்றால் இந்த கதையை கொஞ்சம் மாற்றி எழுதுங்கள். நான் இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது என்னும் பொழுது ரஜினிக்காக கதையை மாற்றி எழுதி இருக்கலாம் லிங்குசாமி. ஆனால் அவர் அதை செய்யாமல் இந்த படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்காது சாரி என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.
எனவே ரஜினியும் அந்த படத்தில் நடிக்கவில்லை. அதனை அடுத்து உருவான ஜீ திரைப்படம் சினிமாவில் வெற்றி அடையவில்லை. எனவே சினிமாவில் வாய்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இயக்குனர் லிங்குசாமியே ஒரு உதாரணமாக இருக்கிறார்.