Latest News
டோனியை வைத்து கிடுக்கு புடி கேள்வி கேட்ட மிஸ்கின்!.. இயக்குனர்னா சும்மாவா?
Director Mysskin: தமிழ் சினிமாவில் திரைப்படம் இயக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் இயக்குனர் மிஸ்கின். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எக்கச்சக்கமான உலக சினிமாக்களை பார்த்துள்ளார். அதே போல ஏராளமான புத்தகங்களையும் அவர் படித்துள்ளார். எப்போதும் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் மிஸ்கின்.
அவரது வீட்டிலேயே பெரும் நூலகம் ஒன்றை வைத்துள்ளார். அவரது பேட்டிகளில் கூட அவற்றை பார்க்கலாம். ஆனால் இளம் தலைமுறையினர்கள் புத்தக வாசிப்பின் மீது அந்தளவிற்கு ஈடுபாடு காட்டுவது கிடையாது. தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியும் இருக்கின்றனர்.
எனவே தோனியை உதாரணமாக வைத்தே அவர்களுக்கு ஒரு உபதேசத்தை வழங்கினார் மிஸ்கின். உங்களுக்கு எல்லாம் பிடித்த கிரிகெட்டர் யார் என கேட்டப்போது பலரும் தோணி என கூறினர். அதற்கு பதிலளித்த மிஸ்கின் தோணி எப்போதும் மிடில் விக்கெட்டில்தான் ஆட்டத்திற்குள் வருவார். வந்த உடனேயே அவர் சிறப்பாக விளையாடுவார். தோணி போல ஏன் மற்ற கிரிக்கெட்டர்களால் சிக்சர் அடிக்க முடிவதில்லை என கேட்டார் மிஸ்கின்.
அதற்கு பதிலளித்த மாணவர்கள் ஏனெனில் அவர் அந்த அளவிற்கு ப்ராக்டிஸ் செய்துள்ளார் என கூறினர். உடனே அதையேதான் நானும் சொல்கிறேன் ஒரு மேட்சில் தோணி ஒரு 50 பந்துகளை அடிப்பார் என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்காக அவர் எப்படியும் ஒரு 5 லட்சம் முறையாவது பந்தை அடித்து பயிற்சி செய்திருப்பார் இல்லையா?.
இப்பொழுது கூறுங்கள் வருங்காலத்தில் இயக்குனர் ஆக நினைக்கும் நீங்கள் இதுவரை எத்தனை கதைகளை படித்துள்ளீர்கள் என கேட்டார். அதை கேட்டவுடன் மாணவர்களால் பதிலே சொல்ல முடியவில்லை. கலையில் முன்னேற இலக்கியத்தின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த விவாதம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் மிஸ்கின்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்