Tamil Cinema News
பல பேரு இங்கு குடிக்காரர் ஆனதே இளையராஜாவாலதான்.. பகீர் கிளப்பிய இயக்குனர் மிஸ்கின்.!
நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் பிரபலமாக இயக்குனர் மிஸ்கின் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனர் மிஸ்கின் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன.
அவர் இயக்கிய அஞ்சாதே, யுத்தம் செய் மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை தமிழில் வந்த க்ரைம் திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட திரைப்படமாக மிஸ்கினின் திரைப்படங்கள் இருந்தன.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு மிஸ்கினின் இயக்கத்தில் திரைப்படங்கள் வருவது குறைந்தது. இந்த சமயத்தில் இயக்குனர் மிஸ்கின் நடிப்பில் ஆர்வம் செலுத்த துவங்கினார். நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் மிஸ்கின்.
லியோ, மாவீரன் மாதிரியான படங்களில் எல்லாம் அவரை பார்க்க முடியும். இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மிஸ்கின்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பட ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட மிஸ்கின் பேசிய விஷயங்கள்தான் இப்போது வைரலாகி வருகிறது. அதில் பேசிய மிஸ்கின் எப்போதுமே மது அருந்துவிட்டுதான் நான் பாடல்கள் பாடுவேன்.
உலகில் மது போதையை தாண்டிய சில போதை உண்டு. இளையராஜான்னு ஒருத்தர் இருக்கார். அவர் இசையை சொல்லலாம். சொல்ல போனால் அவரால் மதுவுக்கு அடிமையானவர்கள் நிறைய பேர் உண்டு. அதுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் அவரோடு மியுசிக்தான் என கூறியுள்ளார் மிஸ்கின்.