Connect with us

தமிழ்நாட்டு காரனுக்கு சக மனுசனோடு பழகவே தெரியாது!.. விளக்கிய இயக்குனர் மிஸ்கின்…

mysskin

Tamil Cinema News

தமிழ்நாட்டு காரனுக்கு சக மனுசனோடு பழகவே தெரியாது!.. விளக்கிய இயக்குனர் மிஸ்கின்…

Social Media Bar

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அவரது திரைக்கதை சொல்லும் விதமும் காட்சியமைப்பும் வித்தியாசமானதாக இருக்கும்.

தமிழ் சினிமாவிலேயே அப்படி படம் எடுப்பவர் அவர் மட்டுமே, சமூகம் சார்ந்து விழிப்புணர்வு கொண்டவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர் முத்தையா போலவோ அல்லது வேறு சில இயக்குனர்கள் போல குறிப்பிட்ட சமூகத்தை  சார்ந்த மக்களை பெருமைப்படுத்தும் விதமாக இவர் படம் இயக்குவது கிடையாது.

மனிதம் மற்றும் அன்பை பேசும் விதமாகவே மிஸ்கின் படங்கள் இருக்கின்றன. ஒருமுறை மிஸ்கின் இயக்குனர் ராமுடன் ஒரு பேட்டியில் பேசும்போது தமிழக மக்களுக்கு மற்றவர்களுடன் பழகவே தெரியாது. என் நண்பன் ராமின் சாதி என்னவென்று இப்போது வரை எனக்கு தெரியாது.

ஆனால் தமிழக மக்கள் யாரை பார்த்தாலும் முதலில் கேட்கும் கேள்வி அவர்கள் என்ன சாதி என்பதாகதான் இருக்கிறது. இன்னும் ஒரு மனிதனை மனிதனாக பார்த்து இவர்களுக்கு பழக தெரியவில்லை என குற்றம் சாட்டியிருந்தார் மிஸ்கின்.

To Top