Connect with us

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

mysskin trisha

News

தாயை பத்தி தப்பா பேசுவீங்களா!.. நாம எல்லாம் ஆம்பளையே இல்ல!.. த்ரிஷா விஷயம் குறித்து மிஸ்கின் காட்டம்!..

Social Media Bar

Director Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிஸ்கின். தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் திரைப்படங்களாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வரவே தற்சமயம் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாவீரன் லியோ மாதிரியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் மிஷ்கின்.

mysskin
mysskin

இந்த நிலையில் தற்சமயம் பெரிதாக பேசப்பட்டு வரும் த்ரிஷா சர்ச்சை குறித்து வாய் திறந்து இருக்கிறார் மிஸ்கின். த்ரிஷா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக அரசியல்வாதி ஒருவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இது குறித்து மிஷ்கின் தனது பேட்டியில் கூறும் பொழுது திரிஷாவை எனக்கு வெகு நாட்களாகவே தெரியும். அவருடன் ஒரு சில காட்சிகளில் பணிபுரிந்து இருக்கிறேன். அவர் ஒரு நல்ல நடிகை அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் அவரை பற்றி இப்படி தவறாக பேசியிருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

trisha
trisha

உங்கள் தாயைப் பற்றியோ இல்லை வீட்டில் உள்ள பெண்களைப் பற்றியோ இப்படி தவறாக பேசுவீர்களா என்று கேட்டிருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது ஒரு நடிகையாக இருப்பது மிகவும் கடினமான விஷயம். என்னுடைய திரைப்படத்தில் ஒரு குழந்தை தற்சமயம் நடித்து வருகிறது அந்த குழந்தைக்கு தமிழே சுத்தமாக தெரியாது. இருந்தாலும் சிறப்பாக நடித்து வருகிறது.

இப்படி பல கஷ்டங்களை தாண்டித்தான் அவர்கள் நடித்து வருகின்றனர் எனவே ஒரு பெண்ணை அழ வைப்பவர்கள் கண்டிப்பாக ஆணாக இருக்க முடியாது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் மிஷ்கின். இதனை அடுத்து மிஸ்கின் பேச்சுக்கு ஆதரவுகள் அதிகமாகி வருகின்றன.

To Top