Latest News
கொலை காரனை விட குடிக்காரன் மோசமானவன்!.. எல்லாத்தையும் இழந்துட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்
Director Nagaraj: சினிமாவில் நடித்த பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேரின் வாழ்க்கை மாறி இருக்கிறது.
ஒரு சிலர் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தற்போது அனைவரும் ரசிக்க கூடிய அளவிற்கு உச்சத்தில் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டு விடுவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெற்றி படத்தை கொடுத்து விட்டு அதன் பிறகு குடிப்பழக்கத்தால் வாழ்க்கை தொலைத்த பிரபல இயக்குனர் ஒருவர், மதுப்பழக்கத்தால் தான் பட்ட கஷ்டங்களை பிரபல பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினம்தோறும் இயக்குனர் நாகராஜ்
கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் தினம்தோறும். இந்த படத்தில் நடிகர் முரளி, நடிகை சுவலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஓவியம் இசையமைத்திருந்தார்.
இந்த படம் அப்போது நல்ல வரவேற்பை பெற்று பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவரும் இயக்குனர் நாகராஜை கொண்டாடினார்கள். மேலும் அப்போது உள்ள நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர் நாகராஜுடன் பணியாற்ற வேண்டும் என விரும்பினார்கள்.
இந்த படம் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் மனசிச்சி சூடு என்று ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் பல படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலம் அவரை வேறு திசையில் மாற்றிவிட்டது.
அதன் பிறகு அவர் மின்னலே, காக்க காக்க ஆகிய படங்களுக்கு வசனம் மட்டும் எழுதினார். மீண்டும் தன்னுடைய மதுப்பழக்கம் அனைத்தையும் விட்டுவிட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு மத்தாப்பு என்ற படத்தை இயக்கினார். இவ்வாறு மதுப்பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை இழந்த நாகராஜ் அதன் பிறகு குடியை மறந்து மீண்டும் சினிமாவில் காலடி பதிக்க நினைத்தார்.
அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் நாகராஜ்
குடியால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுங்கள் என கேள்வி கேட்ட பொழுது அவர் இந்த மதுப்பழக்கத்தால் என் வாழ்க்கையில் எல்லாமே சிதறிவிட்டது. என்னுடைய நண்பர்கள், என்னுடைய குடும்பம், என்னை நம்பியவர்கள் என அனைவருமே என்னை பார்த்து வருத்தப்பட்டார்கள். இவரை வைத்து என்ன செய்வது என ஒன்றும் தெரியாமல் குழம்பி நின்றார்கள்.
மேலும் அவர் பேசும் போது கொலைகாரனை கூட நம்பி விடலாம். ஏனென்றால் அவன் அந்த நொடி அவனுக்கு என்ன தோன்றுகிறதோ எமோஷனலாக செய்து விடுவான். ஆனால் குடிகாரனை நம்ப முடியாது. ஏனென்றால் அவனை மீறி அவன் குடிக்க மாட்டான். எல்லாம் அவன் கையில் தான் உள்ளது.
மேலும் நான் என்னிடம் என்னதான் பிரச்சனை இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். திரும்பி பார்த்தால் நான் குடிப்பது மட்டும் தான் எனக்கு பிரச்சனையாக இருந்தது. எனவே குடிக்காமல் இருந்தால் என்ன தான் நடக்கும் என ஒரு வருடம் குடிக்காமல் இருந்தேன். ஆனால் கை, கால் எல்லாம் உதற ஆரம்பித்தது. ஆனாலும் விடாப்பிடியாக இருந்து குடிப்பழக்கத்தை விட்டேன். இப்போது நான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்