Connect with us

தளபதி 69 ல மம்முட்டி ஷாருக்கை இறக்குவேன்!.. வைரலான நெல்சனின் டாக்!..

vijay nelson

News

தளபதி 69 ல மம்முட்டி ஷாருக்கை இறக்குவேன்!.. வைரலான நெல்சனின் டாக்!..

Social Media Bar

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்கு நடுவே இனி திரைப்படங்களே நடிக்க போவதில்லை. முழுவதுமாக அரசியலில் பயணிக்கப்போவதாக விஜய் கூறியுள்ளார்.

கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம் மட்டும் நடிப்பார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.

thalapathy-vijay1
thalapathy-vijay1

ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படமாகதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் வரிசையில் ஆர்.ஜே பாலாஜி, வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் என பலர் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நெல்சனிடம் ஒருவேளை தளபதி 69 ஐ நீங்கள் இயக்குவதாக இருந்தால் யாரை எல்லாம அதில் நடிக்க வைப்பீர்கள் என கேட்டப்போது அதில் விஜய்யுடன் மம்முட்டி, ஷாருக்கான் போன்ற நடிகர்களை நடிக்க வைப்பேன்.

கதாநாயகியாக நயன்தாரா மற்றும் ஆலியா பட் ஆகியோரை நடிக்க வைப்பேன் என கூறியுள்ளார் நெல்சன். இதனை தொடர்ந்து நெல்சனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பான காம்போ கிடைக்குமே என இதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

To Top