மனசே விட்டு போச்சு.. அப்படி ஒரு கேள்வியை கேட்ட விஜய்.. வருத்தப்பட்ட நெல்சன்..!

இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நெல்சன் இயக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்துதான் வந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் முதன்முதலாக கோலமாவு கோகிலா என்கிற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து நெல்சனுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது.

அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம் டாக்டர் திரைப்படம். 100 கோடி ரூபாய்க்கு ஓடி பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு நெல்சனின் மார்க்கெட்டும் அதிகரித்தது. தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அப்படியாக அவர் இயக்கிய திரைப்படம்தான் பீஸ்ட் வணிகரீதியாக பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தாலும் கூட ஆடியன்ஸ் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் வந்த வண்ணம் இருந்தன.

nelson
nelson
Social Media Bar

வருத்தப்பட்ட நெல்சன்

இந்த நிலையில் விஜய்யிடம் இது குறித்து பேசிய அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் நெல்சன். அதில் அவர் கூறும்போது விஜய்யிடம் சென்று இந்த மாதிரி படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன என்று கூறினேன்.

அதற்கு விஜய் அது ஒன்றும் பிரச்சனை இல்லை இதில் என்ன தவறு செய்தோம் என்று பார்த்து அடுத்த படத்தில் சரி செய்து கொள்வோம் என்று கூறினார். அப்பொழுது நான் இதனால் என் மீது ஏதும் கோபம் இல்லையே என்று கேட்டேன்.

இது விஜய்க்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது .உன் மீது நான் என்ன கோபப்பட போகிறேன். அது இல்லாமல் படத்தை தாண்டி நமக்குள் ஒரு உறவு இருக்கிறது. நான் என்ன படத்தை மட்டும் வைத்து உன்னுடன் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாயா? என்று கேட்டிருக்கிறார் விஜய். அது மிகுந்த மன கஷ்டமாக இருந்தது என்று கூறினார் இயக்குனர் நெல்சன்.