Tamil Cinema News
பெண்கள் பாலி.யல் தொல்லைக்கு அவங்கதான் காரணம்… கதாநாயகிகளை வைத்து செஞ்ச இயக்குனர்.!
பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.
அதனால் இயக்குனர்களும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகின்றனர். சமீபத்தில் வெளியான சித்தா மகாராஜா மாதிரியான திரைப்படங்களுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை அடுத்து நிறைய இயக்குனர்கள் இப்பொழுது இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்படியாக எக்ஸ்ட்ரீம் என்கிற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் இது குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பாலியல் தொல்லைகளை பொருத்தவரை பணக்கார வர்க்கத்தில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு எந்த பாலியல் தொல்லையும் நேருவது கிடையாது ஏனெனில் அவர்கள் பெரிய அதிகார வர்க்கமாக இருக்கின்றனர் அவர்களுக்கு என்று பாதுகாப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதை பார்த்து அதே மாதிரி கவர்ச்சி உடைகளை அணியும் பாதுகாப்பு இல்லாத பெண்கள் தான் பாலியல் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர்.
மொத்த பாலியல் பிரச்சனைக்கும் இதுதான் காரணம் என்று நான் கூறவில்லை ஆனால் இந்த ஆடை விஷயமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர்.
