News
இப்படி பேசுறது தமிழன் செய்யுற செயல் கிடையாது!.. எது வந்தாலும் வாங்கி கட்டிக்க தயாரா இருக்கேன்!.. எழுத்தாளரால் கடுப்பான பாக்கியராஜ்!..
Bhagyaraj : சமீபத்தில் மலையாளத்தில் இயக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். ஒரு சாதாரண சின்ன கதையை எடுத்துக்கொண்டு வெகு சிறப்பாக படமாக்கி அதன் மூலமாக அந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ் மக்கள் பலரும் அந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் 15 கோடிக்கு எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 170 கோடியை தாண்டி லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இவ்வளவு லாபத்தை இதற்கு முன்பு எந்த ஒரு மலையாள திரைப்படமும் தமிழில் ஓடி பெற்று கொடுத்தது கிடையாது.
இந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை மட்டுமன்றி கேரள மக்களையும் விமர்சிக்கும் விதமாக எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கேரள மக்கள் அனைவருமே குடிகாரர்கள் என்றும் அவர்கள் பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் குடித்துவிட்டு தொந்தரவு செய்கின்றனர்.

மேலும் மதுபான பாட்டில்களை தூக்கி காடுகளில் தூக்கி எறிகின்றனர் என்றும் மிக மோசமாக பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் பாக்யராஜ் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறும் பொழுதே வேறு மாநிலத்து மக்களைஅவமதித்து பேசுவது என்பது தமிழனின் பண்பு கிடையாது. படத்தில் என்ன கூற வேண்டுமானாலும் பேசுங்கள். படத்தில் தவறாக இருக்கிற விஷயத்தை பற்றி பேசுங்கள் அதைப்பற்றி யாரும் எதுவும் கூறப்போவதில்லை.
ஆனால் பொது ஜனங்களை பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது ஒரு எழுத்தாளனுக்கு நல்ல விஷயம் கிடையாது என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ். ஏன் இவ்வளவு தாமதம் ஆனாலும் இப்பொழுது தெரிவிக்கிறேன் என்றால் கேரள மக்களுக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ்.
