Connect with us

நான் சொன்ன கொலைகள் உண்மைதான்… போலீஸ் அப்படிதான் சொல்லுவாங்க!.. எதிர்ப்பு தெரிவித்த பாக்கியராஜ்!.

bhagyaraj

News

நான் சொன்ன கொலைகள் உண்மைதான்… போலீஸ் அப்படிதான் சொல்லுவாங்க!.. எதிர்ப்பு தெரிவித்த பாக்கியராஜ்!.

Social Media Bar

Director Bhagyaraj: இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான புள்ளி ஆவார். அவர் கூறிய கதை ஒன்றுதான் தற்சமயம் தமிழக காவல் துறைக்கே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி நீரில் முழ்கி கடந்த 13 ஆம் தேதிதான் அவரது உடல் கண்டறியப்பட்டது.

அதற்கும் பாக்கியராஜ் சொன்ன கதைக்கும் தொடர்பு இருப்பதால்தான் பிரச்சனையே வந்துள்ளது.

பாக்கியராஜ் சொன்ன கதை:

நிஜ வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பேசும் வகையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிற பெயரில் இயக்குனர் பாக்கியராஜ் ஒரு நிகழ்ச்சியை தனது யூ ட்யூப் தளத்தில் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதில் அப்படி பேசும்போது நீலகிரியில் நடக்கும் மர்ம கொலை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.

bhagyaraj-stills-photos-pictures-12
bhagyaraj-stills-photos-pictures-12

மேட்டுபாளையத்தில் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதுண்டு. அப்படி வருபவர்கள் அங்கு குளிக்க செல்வதுண்டு. அதில் சிலர் திடீரென அங்கு காணாமல் போய்விடுவர்.

அங்கு ஆற்றில் சுழல் ஆழம் மாதிரியான விஷயங்கள் அவர்களை உள்ளிழுத்து மரணிக்க செய்கிறது. இந்த நிலையில் அவர்களின் உடலை மீட்டு தரும் நபர்கள் சிலர் அங்குண்டு. அவர்கள் நன்றாக உள் நீச்சல் செய்யக்கூடியவர்கள். ஆனால் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் உடலை தேடி தருவார்கள்.

ஆனால் உடல் வேண்டும் என்பதால் எவ்வளவு கேட்டாலும் உறவினர்கள் கொடுக்க தயாராக இருப்பார்கள். எனவே இவர்களும் உடலை தேடி எடுத்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் அந்த பகுதியில் இந்த தொழிலுக்காகவே உள் நீச்சல் அடிப்பவர்கள் தண்ணீர் வழியாக சென்று நீச்சல் அடிப்பவர்களின் காலை பிடித்து அவர்களை ஆழத்தில் சிக்க வைத்து விடுவார்கள்.

பிறகு உடலை அவர்களே தேடி எடுத்து கொடுத்துவிட்டு பணத்தையும் பெற்றுக்கொள்ளும் அவலம் நடக்கிறது என கூறியிருந்தார் பாக்கியராஜ்.

tn fact check
tn fact check

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல்த்துறை பாக்கியராஜ் கூறிய செய்தி உண்மையில்லை. கடந்த 2022 2023 வருடங்களில் ஆற்றில் எந்த இறப்பும் நிகழவில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இதற்கு சத்யம் செய்திக்கு பதிலளித்த பாக்கியராஜ் கூறும்போது போலீஸ் அப்படிதான் கூறுவார்கள். அந்த பகுதிக்கு நான் படமெடுக்க சென்றபோது அங்கு பரவலாக பேசப்பட்டு வந்த விஷயத்தைதான் இதில் பேசியுள்ளேன் என கூறியுள்ளார் பாக்கியராஜ்.

To Top