Connect with us

அடுத்த படத்தில் வந்த பிரச்சனை.. வாய்ப்பை இழக்கும் இயக்குனர் ஷங்கர்..!

Tamil Cinema News

அடுத்த படத்தில் வந்த பிரச்சனை.. வாய்ப்பை இழக்கும் இயக்குனர் ஷங்கர்..!

Social Media Bar

எப்படி தெலுங்கு சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக ராஜமௌலி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இருந்து வருகிறார்.

முன்வெல்லாம் இயக்குனர் ஷங்கர் எடுக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்தாலும் பயப்படாமல் தயாரிப்பாளர்கள் செலவு செய்து வந்தனர்.

ஆனால் சமீபகாலமாக அவரது இயக்கத்தில் வந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் பெரும் தோல்வியை கண்டிருக்கின்றன. லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது என்பதுஅனைவரும் அறிந்த விஷயம்.

shankar

shankar

அதற்குப் பிறகு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கருக்கு பட வாய்ப்பு கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்கத் தொடங்கி உள்ளதாக ஒரு பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே வேள்பாரி திரைப்படத்திற்கான கதையை எழுதி வைத்திருக்கிறார் இயக்குனர் சங்கர். இதுவரை சங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே அதிக பட்ஜெட் உள்ள திரைப்படமாக வேள்பாரி இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் வேள்பாரி திரைப்படத்தை தயாரிக்கும் அளவிற்கு அதிக பட்ஜெட் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் இந்திய சினிமாவிலேயே இல்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன. மேலும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது இயக்குனர் ஷங்கர் படத்தை தயாரிப்பது குறித்து யோசனையில் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

தாமதங்கள் இருக்கலாம் என்று சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top