News
தமிழ் மண்ணின் குலத்தலைவனின் கதை இது!.. பாகுபலி கூட பக்கத்துல நிக்க முடியாது!. வேள்பாரி ப்ரோஜக்டை ஓப்பன் செய்யும் சங்கர்!.
பெரும் பட்ஜெட் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி, கன்னடத்தில் ஒரு பிரசாந்த் நீல் இருக்கிறார்களோ அப்படிதான் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரும் இருக்கிறார்.
2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பல வருடங்களாகவே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை போக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் 3, கேம் சேஞ்சர் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர்.
வேள்பாரி ப்ரோஜக்ட்
இந்த படங்களின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் தற்சமயம் அடுத்து சு.வெங்கடேசன் எழுத்தில் விகடனில் கதையாக வந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை படமாக்க இருக்கிறார் ஷங்கர். வெகுநாட்களாகவே இந்த கதையை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார் ஷங்கர்.

எனவே தற்சமயம் இந்த படத்தை தயாரிப்பது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசியுள்ளார் ஷங்கர். இந்த படம் 1000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
வேள்பாரி:
தமிழ்நாட்டில் சேரர், சோழர் பாண்டியர் மாதிரியான பேரரசுகள் உருவாவதற்கு முன்பு அவர்கள் தனி தனி குலங்களாக வாழ்ந்து வந்தனர். அந்த குலங்களுக்கு ஒரு தலைவர் இருப்பார். இந்த குல தலைவர்களை வீழ்த்தி அந்த மக்களை சேர்த்துகொண்டுதான் பேரரசுகள் விரிவடைகின்றன.

அப்படியாக ஒவ்வொரு குல தலைவனாக வீழ்த்திய பேரரசுகளுக்கே சிம்ம சொப்பணமாக இருந்தவர்தான் வேடுவர்களின் குலத்தலைவன் வேள்பாரி. பரம்பு மலையை கோட்டையாக கொண்ட வேள்பாரியை தனியாக சென்று வீழ்த்த முடியாமல் மூவேந்தர்களும் ஒன்றினைந்து வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
மேலும் முருகனை குல தெய்வமாக கொண்ட வேள்பாரி தமிழர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். எனவே வேள்பாரி படமாக வரும் பட்சத்தில் அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும்.
