Connect with us

என் படத்தில் அதிக ப்ளாஸ்பேக் இருக்க இதுதான் காரணம்..! இயக்குனர் ஷங்கர் ஓப்பன் டாக்.!

Tamil Cinema News

என் படத்தில் அதிக ப்ளாஸ்பேக் இருக்க இதுதான் காரணம்..! இயக்குனர் ஷங்கர் ஓப்பன் டாக்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். நண்பன் மாதிரியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்களைக் கூட இயக்குனர் சங்கர் இயக்கும்போது அவை அதிக பட்ஜெட் படங்களாக மாறி விடுவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு பட்ஜெட்டை அதிகமாக மாற்றி விடுபவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் திரைப்படங்களில் பிளாஷ்பேக் கதைகள் இருப்பதை பார்க்க முடியும்.

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என்று பெரும்பான்மையான திரைப்படங்களில் இந்த விஷயத்தை பார்க்க முடியும். ஆனாலும் அவர் இயக்கிய சிவாஜி, காதலன் மாதிரியான திரைப்படங்களில் பிளாஷ்பேக் கதைகள் கிடையாது.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஃப்ளாஸ்பேக் கதை அதிக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக நான் இயக்கிய காதலன் திரைப்படத்திலும் பிளாஷ்பேக் இருக்க வேண்டும் என்று உதவி இயக்குனர்கள் கூறினார்கள்.

ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் ஒரு கதைக்கு தேவையான இருந்தால் மட்டும் தான் பிளாஷ் பேக் விஷயத்தை வைக்க வேண்டும். தேவையில்லாமல் உள்ளே புகுத்தினால் அது நன்றாக இருக்காது. அதனால்தான் மற்ற படங்களில் பிளாஷ்பேக் தேவையாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் நான் பயன்படுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

To Top