Connect with us

சினிமாவில் என் ஆசை நிறைவேறாமல் போனதுக்கு தளபதிதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி…

vijay sundar c

Cinema History

சினிமாவில் என் ஆசை நிறைவேறாமல் போனதுக்கு தளபதிதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி…

Social Media Bar

சினிமாவில் காமெடியான கமர்சியல் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி நகைச்சுவையாக எடுத்த பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன.

இந்த நிலையில் அதற்கு பிறகு சுந்தர் சி தொடர்ந்து பேய் படங்களாக இயக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய அரண்மனை படத்தின் பாகங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை கொடுத்தன.

தொடர்ந்து இன்னமும் திரைப்படங்கள் எடுத்து வருகிறார் சுந்தர் சி. சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவருக்கு சினிமாவில் மிகப்பெரும் ஆசைகளாக இரண்டு இருக்கின்றன என்று கூறினார். அதில் ஒன்று அவருக்கு இருக்கும் கனவு படம் பற்றிய ஆசை. மற்றொரு விஷயம் என்னவெனில் விஜய்யை வைத்து ஓர் திரைப்படமாவது இயக்க வேண்டும் என்பது சுந்தர் சியின் நெடுநாள் ஆசையாக இருந்தது.

பலமுறை சுந்தர் சி இதற்கு முயற்சியும் செய்துள்ளார். விஜய்யும் அப்பொழுது நடிப்பதாக இருந்தார். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக விஜய்யால் நடிக்க முடியாமல் போனது. இப்போது விஜய் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சுந்தர் சியால் விஜய்யை வைத்து படம் இயக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு ஆசை இன்னமும் இருந்து கொண்டிருப்பதாக சுந்தர் சி தனது பேட்டியில் கூறியுள்ளார். ஒரு வேளை எதிர்காலத்தில் சுந்தர் சிக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top