Connect with us

உண்மையை என்கிட்ட மறைச்சீட்டாங்க.. தெரிஞ்சிருந்தா அவளுக்கு வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டேன்.. நடிகை குறித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன்.!

Tamil Cinema News

உண்மையை என்கிட்ட மறைச்சீட்டாங்க.. தெரிஞ்சிருந்தா அவளுக்கு வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டேன்.. நடிகை குறித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் சுசீந்திரன் முக்கியமானவர். பெரும்பாலும் சுசீந்திரன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்து வந்தன.

ஆரம்பத்தில் சுசீந்திரனுக்கு என்று தமிழ் சினிமா மார்க்கெட்டிலும் பெரிய இடம் இருந்து வந்தது. பெரிய ஹீரோக்கள் கூட சுசீந்திரன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தனர்.

சுசீந்திரன் பெரும்பாலும் கமர்சியல் திரைப்படங்கள் எடுப்பதை காட்டிலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு கருத்தை முக்கியமாக வைத்திருப்பார்.

அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் போகப் போக சுசீந்திரன் வரவேற்பை இழந்த இயக்குனராக மாறினார். தொடர்ந்து அவரது திரைப்படங்கள் தோல்வியை கண்டன.

இந்த நிலையில் இப்பொழுது மக்கள் மத்தியில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய இடத்தில் சுசீந்திரன் இருக்கிறார். 2k லவ் ஸ்டோரி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

இந்த படமாவது வெற்றி கொடுக்குமா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்து பேட்டியில் அவரிடம் கேட்ட பொழுது இந்த பொண்ணு சீரியல் மூலமாக அறிமுகமானவர் என்று தெரிந்திருந்தால் நான் இவளை படத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டேன்.

ஏனெனில் திரைப்படத்தை மார்க்கெட் செய்பவர்களை பொறுத்தவரை சீரியல் நடிகை என்றால் அந்த படத்தை வாங்கிக் கொள்ளவே மாட்டார்கள். புதுமுக நடிகை என்றால் கூட அதை படத்தை வாங்கி கொள்வார்கள் ஆனால் சீரியல் நடிகை என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று விளக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

To Top