Cinema History
வடிவேலு உன் காலை வாறி விட்டுருவான்!.. அவனை நம்பாதே!.. இயக்குனரை உஷார்ப்படுத்திய கவுண்டமணி!.
Vadivelu: தமிழில் ஒரு காலத்தில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் வி சேகர். அவர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம் வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற பல படங்கள் இப்போதும் மக்கள் ரசித்து பார்க்கும் திரைப்படங்களாக இருக்கின்றன.
பெரும்பாலும் இவரது திரைப்படங்களில் ஒரே ஒரு கதாநாயகன் என்பதாக கதை இருக்காது. மூன்று பேர் கதாநாயகனாக இருப்பார்கள் அவர்களது மனைவிகளும் இருப்பார்கள் அந்த மொத்த குடும்பத்தையும் வைத்து தான் திரைப்படத்தின் கதை செல்லும்.
பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே அவர் திரைக்கதைகள் இருப்பதை பார்க்க முடியும். இருந்தாலும் அதனை நகைச்சுவைகளை சேர்த்து பார்ப்பதற்கு விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்லக்கூடியவர் வி.சேகர்.
கவுண்டமணி செந்திலுடன் சேர்ந்து வடிவேலுவையும் தொடர்ந்து தனது திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார் வி சேகர். நான் பெத்த மகனே திரைப்படத்தில் கூட கவுண்டமணி செந்தில் மற்றும் வடிவேலு மூன்று பேரையும் வைத்து ஒரு காம்போ கொடுத்திருப்பார். அப்பொழுது ஒரு திரைப்படத்தை முடித்த பொழுது வடிவேலுவிற்கு சம்பளமாக ஒரு லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார் வி சேகர்.
அதே மாதிரி ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பிற்கு வரும்பொழுது தினமும் மூன்று முறையாவது வடிவேலு வி சேகரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு செல்வாராம். இதனை கண்ட கவுண்டமணி கூறும் பொழுது இவன் நடிக்கிறான் அவன் நடிப்பை நம்பாதீர்கள் எப்பொழுதாவது ஒரு தடவை காலில் விழுந்து வணங்கினால் பரவாயில்லை.
எப்போதும் விழுந்து வணங்குகிறான் என்றால் இது நடிப்புதான் கண்டிப்பாக இவன் உங்கள் காலை வாரி விடுவான் என்று இயக்குனருக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் கவுண்டமணி. அதன்பிறகு புது கார் வாங்கி வேண்டுமென்றே கவுண்டமணி காரை இடிப்பது போல் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் வடிவேல.
இப்படி பல விஷயங்கள் நடந்த போதும் கவுண்டமணி சொன்ன வார்த்தைகளை இயக்குனர் வி சேகர் கேட்டுக் கொள்ளவில்லை அதற்கு பிறகு அவர் சொன்னது போலவே வடிவேலு நல்ல வளர்ச்சியை கண்ட பிறகு வி சேகருடன் தன்னுடைய தொடர்பை நிறுத்திக் கொண்டார் இந்த விஷயத்தை இயக்குனர் வி சேகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்