News
“நாடே குட்டி சுவரா போனதுக்கு கடவுள்தான்” காரணம் ! – இயக்குனர் வேலுபிரபாகரனின் சர்ச்சை பேட்டி
தமிழில் நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலுபிரபாகரன். நடிகர் அஜய் ரத்னத்தை இவரே தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறைவான அளவிலேயே இவர் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

வேலுபிரபாகர் தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய இயக்குனராகவே பார்க்கப்படுகிறார். ஏனெனில் சமூகத்தில் பலரும் பேச யோசிக்கும் பல விஷயங்களை நேரடியாக பேசக்கூடியவர் வேலுபிரபாகரன்.
2017 இல் இவர் இயக்கி வெளியான ஒரு இயக்குனரின் காதல் டைரி என்கிற திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது.
சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. பொதுவாக இவர் இறை நம்பிக்கைக்கு எதிரானவர் என்பதால் அதுக்குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சமூகம் இப்படி குட்டி சுவராக போவதற்கு கடவுளே காரணம் என அவர் கூறியிருந்தார். சூட்டிங் எடுக்கும்போது கேமிராவில் துவங்கி அனைத்தையும் கடவுளாக கும்பிடுகிறார்கள் என கூறியிருந்தார்.
இந்த வாதம் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதாக இருப்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பேட்டி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
