காசி மேடு மக்களை தொடர்ந்து தப்பா காமிச்ச இயக்குனர்கள்!.. இயக்குனர் ஷங்கர் கூட லிஸ்ட்ல இருக்காரு!.
தமிழ் சினிமாவில் தற்பொழுது வரும் படங்கள் எல்லாம் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்தோ, அல்லது அவர்களின் பேச்சு வழக்கை வைத்தோ, படங்கள் வருவது இயல்பான ஒன்றுதான்.
இவ்வாறு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களை வைத்து படம் எடுக்கும் போது அந்த பகுதியில் வாழும் மக்கள் பற்றி சிலருக்கு தெரியாமல் இருக்கும். அந்த பகுதியை வைத்து எடுக்கப்பட்ட படங்களின் மூலம், அவர்களின் பழக்க வழக்கங்களை நாம் அறிந்துக்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வகையான பேச்சு வழக்குகள் உள்ளன. அவ்வாறு படத்தில் மூலம் ஒரு சில கதாபாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட ஊர்காரர் என்று கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். அந்த கதாபாத்திரம் பார்ப்பதற்கும், அவர்களின் பேச்சைக் கேட்பதற்கும் மிக அழகாக இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சென்னையில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் மையமாக வைத்து எடுத்த படங்கள் அதிகமாக உள்ளது.
அதில் காசிமேடு மக்களை வைத்து எடுத்த படங்கள் பல உள்ளன. ஆனால் அந்த படத்தில் அந்தப் பகுதியில் வாழும் மக்களை தொடர்ந்து தவறாக காட்சிப்படுத்திய இயக்குனர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது.
ரஜினியின் சிவாஜி படம்
பொதுவாக ஒரு படத்தில் ஒரு சில கதாபாத்திரங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போல படங்கள் எடுப்பார்கள். தமிழ் சினிமாவில் பல படங்கள் அவ்வாறு நாம் பார்த்திருப்போம். உதாரணமாக வட சென்னை, மெட்ராஸ் போன்ற பல படங்கள் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
அவ்வாறு அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையாக கொண்டு படத்தின் கதை நகர்ந்து செல்லும்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் காசிமேடு பகுதியில் உள்ள மக்களை தவறாக பல இயக்குனர்கள் படங்களில் காட்சிப்படுத்துவதாக பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதுக்குறித்து பத்திரிக்கையாளர் செந்தில் வேல் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இந்த படம் வெளிவந்து பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் ரஜினி மற்றும் வில்லன் ஆதிசேஷன் பேசிக்கொள்ளும்படியாக ஒரு காட்சி இடம் பெறும்.

அந்த படத்தில் வில்லன் ஆதிசேஷன் பார்ப்பதற்கு வெள்ளையாகவும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு இருப்பார். அந்த படத்தில் வரும் சண்டைக் காட்சியில் ரஜினியிடம் ஆதிசேஷன் கூறும் பொழுது, ஆதிசேஷன் என்றால் குங்குமம் வைத்துக் கொண்டு பொங்கல் சாப்பிடறவனு நினைச்சியா? ஆதிசேஷன் டா.. காசிமேடு ஆதிசேஷன் டா.. என்று கூறியிருப்பார்.
இவ்வாறு காசிமேடு பகுதிகள் உள்ள மக்கள் என்றாலே சண்டைக்கு செல்பவர்கள், ரெளடிகள் என்று அந்த காட்சியை இயக்குனர் கூற வருகிறாரா? என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருக்கும் அவ்வை சண்முகி படத்தில் சண்முகியாக நடித்திருக்கும் கமல் ஒரு காட்சியில் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்லும்போது அங்கு அடிப்பதற்கு நடிகர் கனல் கண்ணன் வருவார். கனல் கண்ணன் ஏற்கனவே மீனா வீட்டில் பாத்திரம் திருடிய மாமியின் தம்பியாக வருவார். ஆனாலும் அவர் ஐயர் பாஷையில் பேசாமல் வட சென்னை மக்கள் பாஷையில் பேசுவார்.
ஏன் அப்படி காட்சி வைக்கவில்லை ஏனென்றால் ஐயர் பாஷை பேசும் ஆள் ரவுடித்தனம் செய்ய மாட்டான் என காட்ட நினைக்கின்றனர். என்கிறார் பத்திரிக்கையாளர் செந்தில் வேல்.
மற்ற இயக்குனர்கள் மீது ஏன் கோபம்
இதுபோன்ற பெரிய இயக்குனர்கள் எல்லாம் காசிமேடு பகுதியை தவறாக கூறும்போது வெற்றிமாறன், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் காசிமேடு பகுதியில் உள்ள மக்கள் அவ்வாறு இல்லை. அவர்களும் படித்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள் போன்று படத்தை எடுத்தால் ஏன் மற்றவர்களுக்கு அது தவறாக தெரிகிறது? என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மெட்ராஸ், வடசென்னை, சார்பட்டா போன்ற திரைப்படங்களில் காசிமேடு பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கையை அழகாக சில இயக்குனர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது ஏன் சில இயக்குனர்களுக்கு, நடிகர்களுக்கும் கோபத்தை உண்டாக்குகிறது.
பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் காசிமேடு பகுதியில் உள்ள மக்களின் பேச்சு வழக்கு போன்றவற்றை தவறாக சித்தரிக்கும் பொழுது, இது போன்ற சில இயக்குனர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி காட்டுவது சில இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் பிடிக்கவில்லை என இதுக்குறித்து பேசியுள்ளார் பத்திரிக்கையாளர் செந்தில் வேல்..