செ$ஸியா ஆடுவாங்களே.. அவங்கதானனு கேப்பாங்க.. வாழ்க்கையில் ரொம்ப கஷ்பட்டேன்.. டிஸ்கோ சாந்தி தங்கை open talk.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி பாடல்களை பார்க்க முடியாது.

ஆனால் அப்பொழுது இந்த மாதிரியான கவர்ச்சி விரும்பிகள் என்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். படத்தில் வரும் ஒரே ஒரு கவர்ச்சி பாடலுக்காக அந்த படத்தை திரையரங்கில் வந்து பார்க்கும் ஒரு மக்கள் கூட்டம் அப்பொழுது இருந்தது.

அதனால்தான் சில்க் ஸ்மிதா மாதிரியான நடிகைகள் எல்லாம் அப்பொழுது மிகப் பிரபலமாக இருந்தனர். அவர் அந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றாலே அந்த படத்தை பார்க்க வருவார்கள்.

தங்க கூறிய விஷயம்:

இதனாலையே கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்களை போஸ்டரில் பெரிதாக போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் பட குழுவினர். அப்படியாக மற்றும் ஒரு பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி.

Social Media Bar

டிஸ்கோ சாந்தியும் சில்க் ஸ்மிதா மாதிரியே நிறைய படங்களில் கவர்ச்சி பாடல்களில் நடனமாடி இருக்கிறார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அது நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுகுறித்து அவரது தங்கை லலிதா குமாரி பேசியிருக்கிறார்.

லலிதா குமாரி இதுக்குறித்து கூறும்போது நான் எங்கு சென்றாலும் என்னை பார்த்தவுடன் சுற்றி இருப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி செக்$யாக டான்ஸ் ஆடுவார்களே அந்த நடிகையின் தங்கையா நீங்கள் என்று தான் கேட்பார்கள்.

அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் எப்படி ஒரு தொழில் இருக்கிறதோ அதேபோல எனது அக்காவிற்கு கவர்ச்சியாக நடனம் ஆடுவது ஒரு தொழில் அவ்வளவுதான். அந்த வகையில்தான் நான் எப்பொழுதும் அதை பார்த்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.