Tamil Trailer
ட்ரைலர்லையே இவ்வளவு குழப்பமா? வெளியான அதர்வா நடிக்கும் டி.என்.ஏ படத்தின் ட்ரைலர்..!
வெகு காலங்களாகவே நடிகர் அதர்வா நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதர்வா.
அவருடைய நடிப்பில் உருவாகி ஜூன் 20 வெளியாக இருக்கும் திரைப்படம் தான் டிஎன்ஏ. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நிமீஷா சஜயன் நடித்து உள்ளார் இவர் ஏற்கனவே சித்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு கதை களத்தை கொண்டது என்று தெரிகிறது. ஆனால் ட்ரைலரை பார்த்த வரையிலும் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.
ட்ரைலரை பார்த்த வரையில் மருத்துவமனையில் அவரது குழந்தை குறித்து ஏதோ ஒரு குற்றத்தை செய்திருக்கின்றனர். அதை அதர்வா எப்படி கண்டறிகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது. ஆனால் என்ன குற்றம் நடந்துள்ளது என்பது ட்ரைலரில் வெளிப்படுத்தப்படவில்லை.
திரைப்படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்கிற நிலை இருக்கிறது இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கி இருக்கிறார்.
