ஈரோட்டில் துணி வியாபாரம்.! – சினிமாவுக்கு முன் அஜித்தின் வாழ்க்கை என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் பெரும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித். 

திரை உலகிற்கு வருவதற்கு முன்பு அஜித் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தார் என்று அவரது ரசிகர்கள் பலர் கூற கேட்டிருக்கலாம். அஜித்தின் முந்தைய கால வாழ்க்கையை பொறுத்தவரை அதுக்குறித்து பல வகையான கதைகள் உலாவி வருகின்றன.

உண்மையில் அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். பிறகு அவரே சொந்த தொழில் செய்யலாமே என முடிவெடுத்து ஒரு ஆடை நிறுவனத்தை ஈரோட்டில் துவங்கினார். ஆனால் அந்த நிறுவனம் பெரும் தோல்வியை காணவே வேறு என்ன செய்வது என தெரியாமல் இருந்துள்ளார் அஜித்.

அப்போதுதான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு பல படங்கள் நடித்த அஜித், தற்சமயம் மிகப்பெரும் நாயகராக இருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு சாதரண வாழ்க்கையைதான் வாழ்ந்துள்ளார்.

Refresh