Cinema History
ஆஃபிஸ் பாயாக இருந்த எம்.எஸ்.விக்கு அடித்த யோகம்!.. இப்படிதான் முதல் பாட்டுக்கு சான்ஸ் வந்துச்சா?
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இசைகளை கொடுத்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன்.
எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி எம்.எஸ்.வி இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்துள்ளன. எம்.எஸ்.வி சினிமாவிற்கு வந்த புதிசில் அவரும் கூட மற்ற பிரபலங்களைப் போலவே அதிகமாக கஷ்டங்களை அனுபவித்தார். எடுத்த உடனே எம்.எஸ்.வி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஆகிவிடவில்லை முதலில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வந்தார்.
ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஹார்மோனியத்தை துடைத்து வைக்கும் உதவியாள் வேலை பார்த்து வந்தார் எம்.எஸ்.வி. ஆனால் அப்போது அவருக்கு இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சும்மா இருக்கும்போது அங்கு இசையமைத்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அப்போது 1948 இல் எம்.ஜி.ஆர் நடிப்பில் அபிமன்யு என்கிற திரைப்படம் வந்தது. இந்த படத்திற்கான இசை அந்த கோயம்புத்தூர் ஸ்டுடியோவில்தான் தயாரானது. அப்போது படத்தின் இயக்குனர் சுப்பையா நாயுடுவிற்கு ஒரு நல்ல டூயட் பாடல் தேவைப்பட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அவருக்கு திருப்தியான ஒரு இசை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பக்கத்து அறையில் யாரோ மியூசிக் போடும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார் சுப்பையா. அங்கு எம்.எஸ்.வி ஹார்மோனிய பெட்டியை வைத்து அசத்தலாக ஒரு இசையை மீட்டியுள்ளார். அதை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர் என்னப்பா இவ்வளவு திறமையை வச்சிகிட்டு இங்க இருக்க.. என் கூட அசிஸ்டெண்டா சேந்துக்கோ என கூறி எம்.எஸ்.வியை அழைத்து சென்றுள்ளார்.
மேலும் அப்போது எம்.எஸ்.வி இசையமைத்த பாடல் அபிமன்யுவில் புது வசந்தாமாமே என்று இடம் பெற்றது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்