அவன் எல்லாம் ஒரு ஆளா!.. வெயிட் பண்ண சொல்ரா!.. வடிவேலுவை முகத்திற்கு முன்னால் திட்டிய ட்ரம்ஸ் சிவமணி…

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு ஆரம்பத்தில் சினிமாவில் நல்ல பெயருடன் தான் இருந்து வந்தார். ஆனால் அரசியலுக்கு வடிவேலு வந்த பிறகு மக்கள் மத்தியில் வரவேற்பை இழந்த ஒரு நடிகராக மாறிவிட்டார்.

அரசியலுக்கு வந்தப்போது வடிவேலு தேவையில்லாமல் விஜயகாந்த் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் மிகவும் மோசமாக விமர்சித்து பேசிவிட்டார். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தப்போது பிரபலங்கள் பலருக்கும் பல நன்மைகளை செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட தலைவரை இப்படி அவதூறாக பேசியதை திரைத்துறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தேர்தலுக்கு பிறகு வடிவேலுவை நிரந்தரமாக தமிழ் சினிமாவில் இருந்து விலக்கி வைத்தனர். அதன் பிறகு விஜயகாந்தே வடிவேலுவை மன்னித்ததை அடுத்து அவருக்கு சில படங்களில் வாய்ப்புகள் கொடுக்க துவங்கினர்.

Social Media Bar

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் வடிவேலு. அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் கூட தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கேப்டனின் மரணம் ஏற்பட்டப்போது சமூக வலைத்தளங்களில் அதற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை வடிவேலு,

இதனால் விஜயகாந்த் நண்பர்கள் பலரும் வடிவேலு மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் கலைஞர் 100 விழாவில் சமீபத்தில் வடிவேலு கலந்துக்கொண்டப்போது அவரை அவமரியாதை செய்துள்ளனர் திரைப்பிரபலங்கள்.

இசை கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி வடிவேலுவிற்காக அமர்த்திய காரில் தனது குடும்பத்துடன் ஏறினார். அப்போது அங்கிருந்தவர்கள் வடிவேலு வெகுநேரமாக காத்திருக்கிறார். அவருக்கு ஒதுக்கிய கார் இது என கூறவும், அவன் எல்லாம் பெரிய ஆளா, அவனை வெயிட் பண்ண சொல்லு என அவர் ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இனி வடிவேலுவின் நிலை சினிமாவில் இப்படிதான் இருக்குமோ என்பதும் ஒரு பெரும் கேள்வியாக இருக்கிறது.