Connect with us

என் ட்ரெஸ்ஸுக்குள் கையை விட்டாங்க… ராதா ரவி மோசமானவர்!.. கண்ணீர் வடிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்!.

radha ravi dubbing artist sangeetha

News

என் ட்ரெஸ்ஸுக்குள் கையை விட்டாங்க… ராதா ரவி மோசமானவர்!.. கண்ணீர் வடிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்!.

Social Media Bar

நடிகர்களுக்கு எப்படி சங்கம் இருக்கிறதோ அதேபோல சினிமாவில் இருக்கும் டப்பிங் ஆர்டிஸ்டிகளுக்கு தனியாக சங்கம் இருக்கிறது. இந்த டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் பலகாலமாக தலைவராக இருந்து வருகிறார் நடிகர் ராதாரவி.

தற்சமயம் நடிகர் ராதாரவி மீது பின்னணி பாடகியான சின்மய் வழக்கு தொடர்ந்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திடீரென்று தன்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி அவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் டப்பிங் யூனியனை சேர்ந்த நபர்கள் ராதாரவிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது சில சர்ச்சையான தகவல்களை அதே டப்பிங் யூனியனை சேர்ந்த டப்பிங் கலைஞர் சங்கீதா வெளியிட்டு இருக்கிறார்.

அவர் இது குறித்து பேட்டியில் பேசும் பொழுது சின்மயி கூறியது போலவே டப்பிங் யூனியனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2017 ஆம் ஆண்டு எனக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஒரு டப்பிங் ஸ்டாலில் பாலியல் தொல்லை ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்போது இருந்த டப்பிங் யூனியன் செயலாளரிடம் இது குறித்த நான் புகார் செய்திருந்தேன். பிறகு இது குறித்து விசாரித்த அவர் நான் அந்த நபரிடம் கண்டித்துவிட்டேன். இருந்தாலும் இனி  அவர்கள் உங்களை டப்பிங்கிற்கு அழைத்தால் கூட நீங்கள் போக வேண்டாம் என்று கூறியிருந்தார்.

தாக்கப்பட்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

நான் அவர் மீது நான் புகார் அளித்திருக்கிறேன் என்றால் நீங்கள் அதற்கு நடவடிக்கை தானே எடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் சட்டரீதியாக இதை கொண்டு சென்றால் உங்களை யூனியனில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டினார்கள்.

பிறகு சின்மயி இதே போல அநீதியின் காரணமாக யூனியனில் இருந்து நீக்கப்பட்ட பொழுது நாங்கள் அனைவரும் சேர்ந்து தனியாக ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தோம். இப்பொழுது அந்த குழுவாகதான் ராதாரவியை எதிர்த்து நாங்கள் டப்பிங் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம்.

Radha Ravi at Jil Jung Juk Press Meet

டப்பிங் யூனியனில் மீட்டிங் நடந்த பொழுது ராதாரவி உறுப்பினர்களிடம் என்னை அடிக்க சொன்னார். அப்பொழுது டப்பிங் யூனியனை சேர்ந்த பலரும் என்னை அசிங்கமாக பேசி என்னை அடித்தனர். எனது ஆடைக்குள் கையை விட்டு எனது உடலை கீறினர்.

என்னுடைய உடையை கிழித்து விடுவார்களோ என்று பயந்து அங்கிருந்து தப்பித்து ஓடி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இவ்வளவு விஷயத்தையும் நான் காவல்துறையில் புகார் அளித்தும் கூட அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு  காரணம் ராதாரவியின் பண பலமும் ஆல் பலமும் தான் என்று சர்ச்சையான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் சங்கீதா.

Source- Link

To Top