Connect with us

எங்க அப்பாவுக்காக செய்ய மாட்டேனா… பாலுமகேந்திராவுக்கு கடைசி நேரத்தில் உதவிய சூரி பட இயக்குனர்..!

News

எங்க அப்பாவுக்காக செய்ய மாட்டேனா… பாலுமகேந்திராவுக்கு கடைசி நேரத்தில் உதவிய சூரி பட இயக்குனர்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு முக்கியமான இடமுண்டு. ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர நினைத்தவர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர்.

கமல்ஹாசனுக்கும் அதே ஆசை இருந்ததால் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணிப்புரிந்துள்ளனர். அதே போலவே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்கள் பலரும் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்குபவர்களாக மாறியுள்ளனர்.

அதில் வெற்றிமாறன் முக்கியமானவர். சமீபத்தில் வெற்றிமாறன் கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இவரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான்.

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தப்போது பாலுமகேந்திராவுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாகிவிட்டார்.

அப்போது அவருக்கு அனைத்து விஷயங்களையும் செந்தில்குமார்தான் கவனித்துள்ளார். எப்படிப்பா இதெல்லாம் பண்ற என ஒருமுறை வியப்பாக வெற்றிமாறன் இதுக்குறித்து கேட்டப்போது என் அப்பாவுக்கு செய்யமாட்டனா அண்ணே என கூறியுள்ளார். இந்த நிகழ்வை வெற்றிமாறன் கருடன் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்திருந்தார்.

To Top