லிப்லாக் காட்சியில் கண்டிப்பா நடிப்பேன்.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் வைத்த துஷாரா விஜயன்!..

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி குறைந்த நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை துஷாரா விஜயன்.

பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவரது திரைப்படங்களில் வரும் பெண்கள் கொஞ்சம் தைரியசாலிகளாகவே இருப்பார்கள்.

தொடர்ந்து வரவேற்பு:

அந்த வகையில் துஷாரா விஜயன் மாரியம்மாள் எனும் தைரியமான ஒரு பெண்ணாக நடித்திருந்தது பலருக்கும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பை பெற தொடங்கினார் துஷாரா விஜயன்.

Social Media Bar

அதற்குப் பிறகு அதே பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திலும் நடித்திருந்தார். ரெனே என்கிற அந்த கதாபாத்திரம் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது,

தொடர்ந்து அநீதி, கழுவேத்தி மூக்கன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் துஷாரா விஜயன். தற்சமயம் நடிக்கும் இளம் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்க பொருத்தமான ஆளாக இருப்பதால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.

ரஜினி படத்தில் வாய்ப்பு:

தற்சமயம் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கும் ராயன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார்.

அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது கதாநாயகர்களுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த துஷரா விஜயன் கண்டிப்பாக நடிப்பேன் ஒரு நடிகையாக நான் அதை செய்து தான் ஆக வேண்டும் ஒரு படத்திற்கு முத்த காட்சி தேவையாக இருக்கும் பொழுது அதை நடிக்க முடியாது என்று நாம் கூற முடியாது என்று கூறி இருக்கிறார் துஷாரா விஜயன்.